காலை தலைப்புச் செய்திகள்|அமித்ஷா மீது வழக்கு To கர்ப்பிணி உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அமித்ஷா மீது வழக்குப்பதிவு முதல் மீண்டும் புதிய படத்தில், இணையும் ’ஜோ’ பட ஜோடி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகி சர்ச்சையான நிலையில்ளுக்கு வெளியே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • இன்று முதல் தொடங்குகிறது கத்தரி வெயில்.இந்நிலையில், 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

 • குமுளி மலையடிவாரத்தையும் விட்டுவைக்காத கோடை வெயில் காரணமாக, வறட்சியை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக மாறிய பசுமை பகுதிகள்.

 • உதகை, கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளது. பழனி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 • ஆவியூர் கல்குவாரியில் வெடிபொருட்களை வெடிக்கச்செய்து செயலிழக்க வைக்கப்பட்டநிலையில், கிராம மக்கள் இனி அச்சம் கொள்ளத் தேவையில்லை என வருவாய் துறை அறிவிப்பு.

 • மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு, படுகாயமடைந்த 8 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 • உயிரிழப்பு கல்லூரி மாணவனின் தவறான பழக்கம், நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

 • கோவையில் பிரபல உணவகத்தில் குழந்தைக்காக வாங்கிய சிக்கனில் புழுக்கள் மற்றும் இரும்புக்கம்பிகள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 • வளைகாப்புக்காக ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்தனர்.இந்நிலையில், பிரேத பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 • கர்ப்பிணி உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரயில்வே , அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா என சோதனை.

 • ஆவடி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட இருவரை சென்னை அழைத்து வந்தது தனிப்படை.

 • கேரளாவில் பிறந்த குழந்தையை சாலையில் தாயே வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் .

 • உத்தரபிரதேசத்தின் ராய்பரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி. சொந்தமாக கார், வீடு, இல்லை; 20 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தகவல்.

 • ராய்பரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுலை, தேர்தல் பரப்புரையில் விமர்சித்த பிரதமர் மோடி அமேதி தொகுதியில் போட்டியிட பயந்துபோய் ஓடி ஒளிந்து வேறு தொகுதிக்கு சென்றிருப்பதாக சாடல்.

 • பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா மீது தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ் அளித்த புகாரில் நடவடிக்கையில் தெலங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் வழக்கில் முன்பிணை கோரி பிரஜ்வல் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று மனுவை விசாரிக்கிறது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

 • கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்குவது தொடர்பாக 7ஆம் தேதி அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

 • இந்தியர்கள் 3 பேரை நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறி திடீரென கைது செய்தது கனடா காவல்துறை.

 • பிரான்சில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேலுக்கு எதிராக கோஷம்.

 • பிரேசிலை புரட்டிப்போட்ட பெருமழை, வெள்ளத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு.

 • ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மண்ணிலேயே வீழ்த்தி கொல்கத்தா அபாரம்.

 • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அமெரிக்க அணி அறிவிப்பு. இந்தியாவை சேர்ந்த மோனங்க் படேல், மிலிண்ட் குமார், ஹர்மன்ப்ரீத் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு இடம்.

 • ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிய குடும்பத்திற்கு இழப்பீடு 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.

 • நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'Bloody Beggar' ஜாலியான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவிப்பு.

 • 'ஜோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ்.இந்நிலையில், சென்னையில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com