[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் செல்லும் குழந்தைகள்

tamilnadu-schools-reopens-today

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் சென்னையில் கடந்த 27ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதன்படி, பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி வகுப்பறைகளைத் தூய்மையாக வைத்திருப்பதை ஆசிரியர்கள்‌, தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிக் கிணறுகள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க ஆலோசனை வழங்க, தலைமை ஆசிரியரை அறிவுறுத்த வேண்டும், தேவைக்கேற்ப‌ அரசு‌ பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகளை துவக்கலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close