[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
கல்வி & வேலைவாய்ப்பு 18 Aug, 2017 08:36 AM

இடைக்கால தடையால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்

interim-stay-on-neet-ug-result-to-continue

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பி காத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக நீடிக்கிறது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் பேசும்போது, நீட்டில் இருந்து நிரந்தர விலக்கு தேவை. மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்த நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு குறித்த அவசரச் சட்டத்திற்கு தமிழக அரசு முயன்று வருகிறது. ஆனால் இந்த அவசரச் சட்டம் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது என்றார்.

இந்நிலையில், நீட் தேர்வு எதிர்ப்பாளர் அனிதா கூறுகையில், நீட் தேர்வு மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என நம்பி அதற்காக தயாராகி, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தற்போது விலக்கு பெற்றால் தாங்கள் பாதிப்புக்குள்ளாவோம் எனக் கூறுகின்றனர். 12 ஆம் வகுப்பிற்கு பிறகு வேறு படிப்புகளில் சேராமல் நீட் தேர்வுக்காக தயாரான மாணவர்கள் நீட் விலக்கை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

மற்றொரு புறம், போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் நடத்தப்பட்ட நீட் தேர்வால் ப்ளஸ் 2-வில் அதிக கட் ஆஃப் பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் நீட் தேர்வு விலக்கு அவசியம் எனக் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வாய்ப்பே இல்லாத தாங்கள் என்ன செய்வோம் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

நீட் தேர்வில் விலக்கு பெறும்பட்சத்தில், இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற‌ மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்‌டும் என்று கோரிக்கை விடுக்கிறார் சமூக சமத்துவத்திற்காக மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத்.

கடந்த மே 7 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து 83‌,859 பேர் தேர்வெழுதினர். இதில் 32‌,570 மாணவர்கள் தகுதி பெற்‌றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close