[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!

prakash-javadekar-speaks-about-education

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தற்போது 1 முதல் 8ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் 24 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டுவர 24 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அதனால் விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும். இந்த தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த மாதமே மறுதேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்படும். கல்வியின் தரம் உள்ளிட்ட 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close