[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தேர்ச்சி விகிதத்தைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு: அதிர்ச்சித் தகவல்

students-denied-to-write-exam-in-theni

தேனி மாவட்டம் கூடலூரில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்தை காரணம் காட்டி 10 மாணவ மாணவிகளை தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் தடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, மாணவ மாணவிகளை தேர்வு எழுத அனுமதி மறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், நேற்று முன் தினம் தான் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வருந்துகின்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தை, மாணவர்களும், பெற்றோரும் தொடர்புகொண்டு கேட்டதற்கு, அடுத்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வெளியில் கூறினால், 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் வாசுவிடம் கேட்டதற்கு, மாணவ மாணவிகள் தட்கல் முறையில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close