[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
  • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
  • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்: கமல்
  • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது #HogenakkalFalls
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,667 கன அடியில் இருந்து 8,554 கன அடியாக குறைந்துள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
கல்வி & வேலைவாய்ப்பு 12 Jul, 2017 07:35 AM

மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

high-court-bans-medical-counselling

ஜூலை 17-ம்தேதி தொடங்கும் மருத்துவ படிப்பு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து சில மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்றும், இதனால் சிபிஎஸ்இ மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் கூறியிருந்தனர். 

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் எனவும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு
இடஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் மனுதாரர்கள் வாதிட்டனர். எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. பின்னர் தமிழக அரசு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்ற
உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே நீடிக்க
வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், ஜூலை 17-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
வழக்கின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close