[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

2011-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வா?: உயர்நீதிமன்றம் புது உத்தரவு

tet-not-compulsory-for-teachers-appointed-prior-to-2011-says-hc

2011-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் இணைந்த ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்ற பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்தின் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் த‌ரப்பில் இருந்து அனுப்பப்பட்ட அறிவிப்பாணையில், ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறவுள்‌ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் பணி இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பே, அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னரே தாங்கள் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், ஆகையால் ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்களிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ராஜா, வரும் 18-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாகவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close