[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

tnpsc-group-1-notification-2016

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், பல்வேறு துறைகளில் உள்ள உதவி ஆணையர்கள் என 85 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுத் தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்தது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கவுள்ள தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் , டிசம்பர் 8ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close