[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் - சஞ்சய் ராவத்

பரோட்டா தர மறுத்ததால் ஓட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய 2 போலீசார்.

2-police-man-suspend

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் விளாங்குடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலில் 2 காவல் துறையினர் பரோட்டா, ஆம்லெட் ஆகியவற்றை பார்சல் வாங்கிக்கொண்டு, பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். அவர்களிடம் பணம் கேட்ட கடை ஊழியரிடம் போலிசாரிடமே பணம் கேட்கிறாயா? என்று கூறி காவல் துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. பின்னர் அந்த ஊழியரை கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் அடித்துள்ளனர். இதுதொடர்பாக சோமசுந்தரம், காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவுக்கும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பினார்.

இதையடுத்து, காவல்துறை ஆணையர் தீவிர விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்தை ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியை பார்த்து, ஏட்டு அர்ஜுன், மந்தைசாமி ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close