[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் சாட்சியம் பதிவு

sankar-murdered-case-witness-recorded

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில் 5 பேரின் சாட்சியம் ‌பதிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் ‌நடைபெற்ற இந்த விசாரணையில் குணசேகரன், லோகிதாசன், அமர்நாத், தங்கவேல், கொல்லப்பட்ட சங்கரின் சகோதரன் விக்னேஷ்வரன் ஆகியோர் சாட்சியம் கூறினர். மேலும் 9 பேரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய அரசு வழக்கறிஞர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கை இன்றை‌ய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் சங்கர் மற்றும் மனைவி கௌசல்யா மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சங்கர் உயிரிழந்தார். கடந்த மாதம் வழக்கு தொடர்பாக சாட்சி விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 121 சாட்சியங்களில், இதுவரை பாதிக்கப்பட்ட கௌசல்யா உள்பட மொத்தம் 9 பேரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close