[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
மாவட்டம் 17 Sep, 2016 05:14 PM

காவிரி பிரச்னையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி

narayanaswami-said-that-cauvery-issue-affecting-people-s-normal-life

கர்நாடகாவை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் தீ குளித்த விக்னேஷ் உயிரிழப்பு வேதனையளிப்பதாகவும், வேறு யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது புதுச்சேரிக்கு தேவையான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இரண்டு நாள் பயணமாக டில்லி சென்று நிதித்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியது திருப்த்தியளித்துள்ளதாகவும்,மத்திய அரசின் கவனம் புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது என்று தெரிவித்த அவர்,

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இடைக்கால உத்தரவுபடி 7 டிஎம்.சி தண்ணீர் கிடைக்கவேண்டும் அதில் தற்போது விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய பங்கீடு குறித்து உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும். இந்த விவகாரத்தை வலியுருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், புதுச்சேரியில் எந்தவித அசம்பாவித சம்பவம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது என்று தெரிவித்த நாராயணசாமி, புதுச்சேரியில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது போன்று கர்நாடகத்திலும் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு முழு பாதுகாப்பை அம்மாநில அரசு செய்து தரவேண்டும் என தெரிவித்தார். மேலும் இது தொடர்பான போராட்டத்தின்போது விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்ததால் உயிரிழந்தது வேதனையளிப்பதாகவும், இது போன்று இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் புதுச்சேரியில் இந்த மாதம் முதல் 7வது ஊதியக்குழு பரிந்துரையினை அமல்படுத்தியுள்ளதாகவும் இதற்கான கோப்பு கையெழுத்திட்டதாகவும் தெரிவித்த அவர் இதன் மூலம் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close