[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை ஏடிஎம் பணம் கொள்ளை: 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து பணத்தை மீட்ட போலீசார்

chennai-police-arrest-atm-van-looters-within-24-hours

சென்னை ராயபுரம் பகுதியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணம் கொள்ளைபோன சம்பவத்தில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து ரூ.26 லட்சம் பணத்தையும் மீட்டனர்.

பாரிமுனை பகுதியில் உள்ள அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள ஏடிஎம்களில் பணம் நிரப்ப தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வேனில் ஊழியர்கள் பணம் எடுத்துச் சென்றனர். பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் பாதுகாப்பு நிறுவன வாகனத்தைக் கடத்திச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு நிறுவனம் சார்பில் வடக்குக் கடற்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வடசென்னை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையறிந்த கொள்ளையர்கள் வேனை ராயபுரம் பகுதியில் விட்டுவிட்டு தப்பியோடினர். அதிலிருந்த பணத்தை மட்டும் அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இந்தசம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நிறுவனத்தில் ஓட்டுனராகப் பணிபுரிந்துவந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது உறவினரான லிங்கம் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் ராஜேஷ், போலி சாவி மூலம் வாகனத்தைத் திருடி அதிலிருந்த பணத்தைத் திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த ரூ.26 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். கொள்ளை நடந்து 24 மணி நேரத்துக்குள் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களைக் கைது செய்ததுடன், பணத்தையும் பறிமுதல் செய்த போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close