[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை 

father-as-kill-the-child-in-tiruvanamalai

நடு இரவில் பெற்ற பிள்ளையை தந்தை ஒருவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துள்ளார்.   

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். அவர் அதே பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஸ்வரி என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
    
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் கார்த்திகேயன், அவரது தந்தை தனபால், மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென எழுந்த கார்த்திகேயன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கத்தியால் துண்டு துண்டாக வெட்ட தொடங்கியுள்ளார். 

Image result for குழந்தை வெட்டி கொலை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை துண்டுதுண்டாக வெட்டிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வானாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் கண்முன்னே குழந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close