[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

அடையாளம் தெரியாத நபர்களால் வாலிபர் அடித்துக் கொலை 

a-man-has-murdered-by-his-wife

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த பொன்னம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கும் ரம்யா என்பவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.  இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களிக்கு முன் இரவு பதினோரு மணியளவில் அருண்குமார் ரம்யாவிற்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருண்குமார் கோபமாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். 

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அருண்குமார் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் வீட்டின் அருகேயுள்ள ஏரி கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். இதனையடுத்து மணியம்பட்டு ஏரியை ஒட்டியுள்ள கிணற்றின் மேல் பகுதியில் அருள்குமார் முகம் மற்றும் மார்பு பகுதிகளில் கடுமையான காயங்களோடு சடலமாக இருப்பதை பார்த்தனர். பின் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மனைவியே கூலிப் படையை ஏவி கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close