[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை ! தேடப்பட்டு வந்த 8 பேரும் கைது

sexual-harassment-to-child-in-puducherry

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிறுமி வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழுதாவூரைச் சேர்ந்த விக்கி என்பவர் அந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வழுதாவூரில் உள்ள தோப்புக்கு சிறுமியை அழைத்துச் சென்ற விக்கி, அவரை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையெடுத்து பெற்றோ‌ர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவர்‌, சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டறிந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் குற்றச்சாட்டுக்கு ஆளான அருண், விக்கி உள்பட 8 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்கள் 8 பேரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனைதொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி விக்கி, அவரது நண்பர்கள் முகிலன், கண்ணதாசன், சூர்யா, தேவா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மேலும், தலைமறைவாக இருந்த அசோக், கலை, சூர்யா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கைது செய்யப்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close