[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“வாய்பேச முடியாத இளம் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்” -  விசாரணையில் தகவல் 

a-17-years-girl-has-raped-and-murder-in-sivagangai

சிவகங்கையில் 17 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழசேவல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் அச்சரம்பட்டி. இக்கிராமத்தில் வசித்து வந்த 17 வயது இளம் பெண் கடந்த ஜூலை 10ம் தேதி மாணிக்கம் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

எப்படி நடந்தது சம்பவம்

அச்சரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிற அழகு என்பவரின் 17 வயதான மகளுக்கு வாய் பேச முடியாது. எட்டாம் வகுப்பு வரை இந்த பெண் படித்திருக்கிறார். கடந்த ஜூலை 10ம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் தோப்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் மாணிக்கம் என்கிற 27 வயது இளைஞர் அத்துமீறி பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்.  அப்போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்க கழுத்தை நெறித்து இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார். பலத்த காயமடைந்த அந்த பெண்ணை இழுத்துச் சென்று ஒரு புதருக்குள் வீசியிருக்கிறார். 

காலை சுமார் 9.45 மணியளவில் கல்யாணி என்கிற பெண் அந்த புதருக்கு அருகில் சென்ற போது முனகல் சத்தம் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியில் புதருக்குள் சென்று பார்க்கும் போது அரைநிர்வாணத்தில் மயக்க நிலையில் அந்த பெண் கிடந்துள்ளார். இதுகுறித்து கீழசேவல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

போலீசார் விசாரணை

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தினை ராமநாதபுரம் டிஐஜி காமினி, எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கின்றனர்.  குற்றவாளியான மாணிக்கத்திடம் போலீசார் விசாரணை செய்து நேற்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.பி. ஜெயசந்திரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரெல்லாம் நடமாடினார்கள் என்பது குறித்து போலீசார் கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணிக்கம் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி தான், குற்றவாளி மாணிக்கம் வீடு இருந்தது” என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close