[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கொலை, கொள்ளை... 27 வயதில் தாதாவான பேராசிரியர் மகள்!

murder-atm-loot-extortion-27-year-old-jaipur-woman-accused-of-killing-man

சினிமாவில் வரும் கிரைம் கதைகளை மிஞ்சி விடுகின்றன சில நிஜக் கதைகள்! அப்படித்தான் இருக்கிறது இந்த கதையும்!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துஷ்யந்த் ஷர்மா (27). இவருக்கு டிண்டர் என்ற மொபைல் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமானார் பிரியா சேத் (27). ஷர்மா, தனது புரொபைலில் மாத வருமானம் என கோடிகளை குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து பிரியாவும் ஷர்மாவும் பழகியுள்ளனர். பின்னர், தான் குடியிருக்கும் பாலாஜி நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஷர்மாவை அழைத்திருக்கிறார் பிரியா. ஆசையோடு வந்தார் ஷர்மா. அங்கு பிரியாவின் நண்பர்கள் திக்‌ஷந்த் கம்ரா (20), லக்‌ஷயா வாலியா (21) ஆகியோர் இருந்துள்ளனர். 

ஷர்மாவை கட்டி வைத்து பணம் பறிப்பதுதான் அவர்கள் திட்டம். அதன்படி வந்த ஷர்மாவை வசமாகக் கட்டிப் போட்டனர். பின் , ஷர்மாவின் தந்தைக்கு போன் செய்து, ரூ.10 லட்சம் தந்தால் உங்கள் மகனை உயிரோடு பார்க்கலாம் என்று மிரட்டியுள்ளார் பிரியா. பிறகுதான் தெரியவந்தது ஷர்மா, அந்தளவுக்கு ஒர்த் இல்லை என்பது. இப்படியே ஷர்மாவை வெளியே விட்டால் நம்மை பற்றிய ரகசியத்தை சொல்லிவிடுவான் என்று பயந்து மூன்று பேரும் சேர்ந்து கொன்றுள்ளனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு சூட்கேஸில் வைத்து அமெர் பகுதியில் சாலை யில் வீசிவிட்டு வந்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக, விசாரித்த போலீசார், பிரியா அண்ட் கோவை அமுக்கியது. பிரியாவிடம் விசாரித்தால் பல திக், திடுக் கதைகள் வெளிவந்தன. 

பிரியா சேத்தின் தந்தை ராஜஸ்தானின் பாலியில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியர். 2012-ல் கல்லூரி படிப்புக்காக ஜெய்ப்பூர் வந்தார் பிரியா. ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை வந்தது. பார்ட் டைம் வேலைக்காக பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தார். அப்போது பழக்கமானார் ஏஜென்ட் ஒருவர். அவர், நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியை பாலியல் தொழிலுக்கு வாடகைக்கு விட்டால் வருமானம் குவியும் என்று கூற கனவு காண தொடங்கினார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அதை செய்தார். அதன் மூலம் சில நண்பர்கள் கிடைத்தனர். அவர்களை வைத்துக்கொண்டு கொள்ளை மற்றும் பணப் பறிப்பில் ஈடுபட்டார். ஏடிஎம் கொள்ளையும் இதில் அடக்கம். 

இந்தக் கொள்ளை தொடர்பாக இவரை கைது செய்த போலீசார், விபசார வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அதில் இருந்து வெளியே வந்தார்.

டேட்டிங் ஆப் மூலம் பல பணக்காரர்களுடன் பழகினார். பின் அவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது, அவர்களின் உடையை அவரே நீக்கிவிட்டு நெருங்கி நின்றபடி புகைப்படம் எடுத்துள்ளார். அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்து பலர் மூச்சுக்காட்டவில்லை. இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பணம் பண்ணியிருக்கிறார் பிரியா. இத்தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close