[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

காதலனுக்கு பரிசளித்த கத்தியால் கழுத்தறுப்பட்ட காதலி

vellore-youth-try-to-kill-his-lover

வேலூர் மாவட்டம் காட்பாடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சபீர் (24). இவர் வேலூரில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபித்ரா தேவி(23). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுபித்ரா தேவியை சபீர்  கேட்டு வந்துள்ளார். ஆனால் தனது பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே நமது திருமணம் நடக்கும் என சுபித்ரா தேவி கூறி வந்துள்ளார். இதனால் சுபித்ரா தேவியின் பெற்றோர் 2 முறை காட்பாடி காவல் நிலையத்தில் சபீர் மீது புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு சபீர் நேற்று சுபித்ராவுக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் என கூறியுள்ளார். இதனை ஏற்று இருவரும் நேற்று இரவு வேலூர் கிரீன் சர்க்கிலில் உள்ள தனியார் பாரில் இருவரும் மது அருந்திக்கொண்டே பேசியுள்ளனர். அப்போதும் சபீர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுபித்ரா தேவியை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.  சுபித்ரா ஒரு இஸ்லாமிய பெண்ணாக மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு  சுபித்ரா தேவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சபீர் பாரை விட்டு வெளியே வரும் போது தான் வைத்திருந்த பேனா கத்தியை கொண்டு திடீரென  சுபித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி கிழே விழுந்த  சுபித்ராவை தானே ஆட்களை அழைத்து மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார். காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினரிடம் நாங்கள் இருவரும் வெளியே வரும் போது  சுபித்ரா திடீரென கழுத்தில் ரத்த காயத்துடன் கீழே விழுந்தார் அவரை நான் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறியுள்ளார். சபீர் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் சபீரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது சபீர் தான்  சுபித்ரா கழுத்தை அறுத்ததாக ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து வேலூர் வடக்கு காவல்துறையினர் சபீர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சபீரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சபீர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுபித்ரா வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து இல்லை. 


சபீர்  சுபித்ரா கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி 4-வருடங்களுக்கு முன்  சுபித்ரா தன் காதலன் சபீருக்கு பரிசாக அளித்த கத்தியாகும்.  சுபித்ரா வித்தியாசமான கத்திகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர் அந்த வகையில் சேகரித்த கத்தியையே தன் காதலனுக்கு காதல் பரிசாக கொடுத்துள்ளார். அந்த கத்தியாலேயே தற்போது குத்துபட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close