[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 4 பேர் கைது

coimbatore-police-seize-3-24-lakh-sachets-of-gutka

கோவையில் சட்டவிரோதமாக குட்கா தயாரித்த தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 4 பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

டெல்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில், குட்கா தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று முன்தினம் 7 மணி அளவில் சோதனையைத் தொடங்கினர். சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், மூட்டை, மூட்டையாக குட்கா மற்றும் குட்கா தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் மட்டு‌மன்றி, பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் குட்கா அனுப்பட்டு வந்தது தெரியவந்தது. ‌இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆலை மேலாளர் ரகுராம், தொழிலாளர்கள் அஜய், சோஜிராம், ராம்தேவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயினை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிபதி வேடியப்பன் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close