[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

சென்னையில் மீன் வியாபாரி வெட்டிக்கொலை

fish-seller-murdered-in-chennai

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மீன் வியாபாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகரில் வசித்து வந்தவர் சீனிவாசன். காலையில் வழக்கம்போல் நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பள்ளிக்கரணை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பள்ளிக்கரணை பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை சீனிவாசன் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close