[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

உ.பி.யில் மகளை வன்கொடுமை செய்து தந்தையை அடித்துக்கொன்ற பாஜக எம்எல்ஏ?

bjp-mla-daughter-rape-in-up

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த எம்எல்ஏவின் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார் பலருடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கடந்த ஆண்டே புகார் செய்தார். ஆனால் போலீசாரோ புகாரை வாங்க தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பே அப்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே, அன்றைய தினம் இரவே இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை கவுதம்மாவு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீஸ் நிலையத்திலே மர்மமான முறையில் சுரேந்திர சிங் இறந்ததாகவும் கூறப்பட்டது. எனவே இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச காவல்துறை ஏடிஜிபி ஆனந்த்குமார் கூறும்போது, “பாலியல் வன்கொடுமையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கூறப்படும் இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் உயிரிழக்கவில்லை. அவர் மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் உயிரிழந்துள்ளார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பாஜக எம்எல்ஏ கடுமையாக தாக்கியதாலேயே சுரேந்திர சிங் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். மேலும் சுரேந்திர சிங் மரண விவகாரத்தில்,  எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசும்போது, “ சம்பந்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை இதுவரை கைது செய்யாதது ஏன்? அவரது சகோதரர் கைது செய்யப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அவர்களை, சாகும் வரை தூக்கிலிட வேண்டும். எனக்கு நீதி வேண்டும்.எனது தந்தையின் மரணத்துக்கும் அவர்கள்தான் காரணம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : UpUPUtarapradeshBJPBJP MLAMLARapeDaughter
Advertisement:
Advertisement:
[X] Close