[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

சொத்துக்காக தாயை வெட்டி கொன்ற மகன் கைது

son-murdered-his-mother-for-asset-in-erode

ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டியில் சொத்துக்காக தாயை வெட்டிக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயியான இவர் வங்கியில் நகை அடமான கடன் பெற்றுள்ளார். நகைக்கான தொகையை செலுத்தாததால் வங்கியில் இவரது நகையை ஏலம் விடப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வீட்டை விற்பனை செய்து பணம் தருமாறு பாலசுப்பிரமணி தனது தாயார் ரத்தினாம்பாளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காததால் தாயார் ரத்தினாம்பாளை, பாலசுப்பிரமணி வெட்டி கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரச்சலூர் போலீசார், உயிரிழந்த ரத்தினாம்பாளின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்ததாக பாலசுப்பிமணியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close