[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
குற்றம் 03 Dec, 2017 08:27 AM

ஹாசினி கொலையாளி நிகழ்த்திய மற்றொரு கொடூர கொலை

criminal-killed-his-mother

சிறுமி ஹாசினி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மற்றுமொரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்.

சென்னை போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மாதாநகரை சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் 7 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி அதே பகுதியில் அப்போது வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடலை சூட்கேசில் வைத்து எடுத்துச்சென்ற தஷ்வந்த் மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஹாசினியின் உடலை எரித்தார்.

தஷ்வந்த்தான் இந்த கொடூர கொலையை செய்தார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனால், ஜாமீனில் வெளிவர முடியாமல் கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் தஷ்வந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை உரிய பதிலளிக்கவில்லை எனக்கூறி குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து தஷ்வந்த்தை மகளிர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. தங்கள் ஆசை மகளை கொடூரமாக கொன்ற தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த பெற்ற தாயையே கொலை செய்துள்ளார். குன்றத்தூரில் உள்ள வீட்டில் அவரது தாய் சரளாவை கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார்.  இதையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் தஷ்வந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close