[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கியூ பிரிவு போலீசார் பறிமுதல்

gold-smuggled-out-of-sri-lanka-police-seized-by-ku-division

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட‌ ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை நாட்டுப் படகில் சுமார் ஐந்தரை கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இதனை கீழக்கரையைச் சேர்ந்த நசீர் என்பவர் படகிலிருந்து கடற்கரைப் பகுதிக்கு எடுத்து வருவதாக  கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற அவர்கள் நசீரை பிடித்தனர். அவரிடமிருந்த ஐந்தரைக் கிலோ தங்கமும், நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நசீரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு நசீருக்கு உதவியவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close