[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.5 கோடி மோசடி: புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

rs-2-5-crore-cheating-in-coimbatore

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவர்கள் மீது காவல்துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கோவை கணபதி லட்சுமிபுரம் பகுதியில் சூர்யா கணபதி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தந்தை, மகனான ஜெயபிரகாஷ், ஜித்து என்பவர்கள் கடந்த 2005 முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். ரூ.6,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் பணம் செலுத்தும் முறையில் நடந்து வந்த இந்த ஏலச்சீட்டில், கடந்த 2 ஆண்டுகளாக முறையாக பணத்தை திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, உள்துறை செயலாளர் என பல்வேறு துறைகளுக்கு புகார் அளித்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் வழக்குப்பதிவு கூட செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுமார் 250 பேரிடமிருந்து ரூ.2.5 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும், மோசடி செய்தவர்களுக்கு கேரளாவில் பல கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறும் பாதிக்கப்பட்டவர்கள், இதற்கு மூலக்காரணமான கோவையை சேர்ந்த நிறுவனத்தின் மேலாளாராக இருந்த ஜவஹர் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close