[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கார்த்தி சிதம்பரம் நோட்டீஸ் விவகாரம்: தடைக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்

karthi-chidambaram-notice-the-supreme-court-has-ban

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக உள்துறை அமைச்சம் பிறப்பித்த தேடப்படும் நபர் நோட்டீஸ் மீது உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தி விசாரணையும் மேற்கொண்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்லாமல் இருக்க தேடப்படும் நபராக அறிவித்து அதாவது லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்து மத்திய அரசு கடந்த மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா நேரில் ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து சிபிஐ தரப்பில் “வெளிநாடு செல்வதை தடுக்கவே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கார்த்தி ஆஜராகவில்லை” என்று வாதிட்டப்பட்டது.

சிபிஐ தரப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக உள்துறை அமைச்சம் பிறப்பித்த லுக்அவுட் நோட்டீஸ் மீது உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு தடை விதித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான விரிவான விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close