டி.வி.நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகரை போலீஸ் தேடி வருகிறது.
பிரபல இந்தி டி.வி.சீரியல்களில் நடித்துள்ள நடிகை அவர். மும்பையை சேர்ந்த அந்த நடிகை, இந்தி டிவி. நிகழ்ச்சிகளான ’கஹானி கர் கர் கி’, ’தேஸ் மேன் நிக்லா கோஹா சந்த்’, ’நாச் பலியே’ ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். அந்த நடிகைக்கும் ஹரியானாவைச் சேர்ந்த துணை நடிகர் வினித் வர்மா (24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. நட்பு, நாளடைவில் காதலானது.
இந்நிலையில் நடிகையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஹரியானா வரச் சொன்னார் நடிகர். அதன்பேரில் அங்கு சென்ற நடிகை, யமுனா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். அங்கு பிறந்த நாளை கொண்டாடிய நடிகைக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை கர்ப்பமானார். தன்னைத் திருமணம் செய்துக்கொள்ளும்படி துணை நடிகரிடம் வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால், ஹரியானா மாநிலம் யமுனா நகர் போலீசில் புகார் செய்துள்ளார், அந்த நடிகை. அதில் தன்னுடன் வினித் பழகிய விவரம் அனைத்தும் அவர் குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் கூறியிருந்தார். புகார் கொடுத்ததை அடுத்து துணை நடிகர் மாயமாகிவிட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்