[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

தாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..!

caught-on-video-oru-adaar-love-actress-noorin-shereef-mobbed-at-supermarket

மலையாள நடிகை ஒருவர் சூப்பர் மார்க்கெட், கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் இருந்தவர்களால் மூக்கு உடைக்கப்பட்டுள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நூரின் ஷெரிஃப். இவர் சமீபத்தில் மலப்புரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது இவர் இரண்டு மணிநேரம் தாமதமாக சென்றதால் அங்கு கூடி இருந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ரசிகர் ஒருவரின் கை, நூரின் ஷெரிஃப்பின் மூக்கில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட வலியால் நூரின் ஷெரிஃப் மேடையிலேயே அழுதுள்ளார். எனினும் வலியை பொருட்படுத்தாமல் அவர் மேடையில் தொடர்ந்து உரையாற்றவும் செய்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நூரின் ஷெரிஃப்பின் தாயார், “எனது மகளும் நானும் ஒரு சூப்பர் மார்க்கெட் கடை திறப்பு விழாவிற்கு சென்றோம். அந்த விழா 4 மணிக்கு எனக் கூறினார்கள். நாங்கள் சரியான நேரத்திற்கு சென்றோம். எனினும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் எங்களை 6 மணி வரை ஹோட்டலில் தங்க வைத்தனர். அப்போது தான் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் 6 மணிக்கு சென்ற உடன் அங்கு இருந்தவர்கள் எனது மகள் மீது கோபம் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close