[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு!

actress-ragavi-s-husband-found-dead

பிரபல நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.  கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினார். அவர், சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்று தெரியவந்தது. 

உடனே ஜோலார்பேட்டை போலீசார் ராகவிக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ராகவி, அவர் தனது கணவர்தான் என்று அடையாளம் காட்டினார்.

சசிகுமார், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடன்சுமை காரணமாக, இவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இதற்கிடையே, அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் சசிகுமார் மனமுடைந்ததாகவும் அவர் மனைவி நடிகை ராகவி, போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close