[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

இந்தி நடிகர் ’ஷோலே’ விஜு கோடே காலமானார்

veteran-actor-viju-khote-dies-best-known-as-kalia-from-sholay

பிரபல இந்தி நடிகர் விஜு கோடே உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

பிரபல இந்தி நடிகர் விஜூ கோடே. இவர் புகழ்பெற்ற ’ஷோலே’ படத்தில் காலியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அவர் நடிப்பும் பேசிய வசனமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி ’அந்தாஸ் அப்னா அப்னா’ என்ற படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. 

இந்தி மட்டுமின்றி மராத்தி படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1964 ஆம் ஆண்டில் இருந்து, சுமார் 300 படங்களுக்கு மேல் குணசித்திரம், வில்லன் வேடங்களில் நடித்துள்ள அவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close