[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

சிரஞ்சீவி படத்துக்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்!

kamal-lends-his-voice-for-chiranjeevi-s-sye-raa-narasimha-reddy

சிரஞ்சீவி நடித்துள்ள ’சைரா நரசிம்ம ரெட்டி” என்ற வரலாற்றுப் படத்துக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் சினிமாவாகி உள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ரெட்டியாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், நயன்தாரா, சுதீப், தமன்னா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கும் இந்தப் படம், தெலுங்கு தவிர, தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த்சாமி டப்பிங் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அறிமுகம், படத்தின் தொடக்கத்தில் இடம்பெறுகிறது. இதன் தமிழ்ப் பதிப்பிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதே போல மலையாளப் பதிப்புக்கு நடிகர் மோகன்லாலும் தெலுங்கு பதிப்புக்கு பவன் கல்யாணும் பேசியுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close