பிகில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாமென தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாமென தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, ''படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
தணிக்கைக்கு படம் சென்றுவந்த பிறகு நாங்களே சரியான தேதியை அறிவிப்போம். அந்த நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உருவாக்க சரியான நாளாக இருக்கும். இன்று மாலை 6 மணிக்கு புதிய போஸ்டர் வெளியிடப்படும்'' என தெரிவித்துள்ளார்
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்