[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

“குழந்தைகளை குறைகூறாதீர்கள்” - விஜய் சேதுபதி வேண்டுகோள்

parents-need-encourage-their-child-vijay-sethupathy

குழந்தைகளிடம் குறை இருந்தால் அதனை பெரிது படுத்தாமல் ஊக்கப்படுத்துங்கள் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, “அரசுப் பள்ளியில் படித்த மாணவி தாய்வான் நாட்டில் நடந்த போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வென்ற ஷெரின் அனிதாவை நான் மனதார பாராட்டுகிறேன். தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் குறை இருந்தால் அதனை பெரிதுபடுத்தாமல், பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். நடிகரான விஜய் சேதுபதி பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close