[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

நாளை வெளியாகும் அஜித்தின் 'அகலாதே' பாடல் 

agalaathey-song-nerkondapaarvai-releases-tomorrow-at-6-pm

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் 'அகலாதே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் எனப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 

இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'வானில் இருள்', ‘தீ முகம்’, இடிஎம் பாடல் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் 'அகலாதே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் எனப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் அஜித், வித்யாபாலன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close