[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

‘விஜய் 63’ டபுள் ஹீரோஸ்.. ‘விஜய் 64’ டபுள் ஹீரோயின்ஸ்..? 

thalapathy-64-to-cast-two-young-heroines

‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய் நடிக்கும் 63 ஆவது திரைப்படம் 'பிகில்'. அவரது பிறந்த நாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 21 தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பது போஸ்டர் மூலம் தெரியவந்தது. விஜயின் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்றும் தெரியவந்துள்ளது.

கால்பந்து வீரரா‌க காட்சியளிக்கும் விஜய்க்கு அருகில், நடுத்தர வயதான தோற்றத்தில் வேட்டியுடன் மற்றொரு விஜய் காணப்பட்டார். இரண்டாவது போஸ்டரில் 4 விதமான தோற்றங்களில் விஜய் காட்சியளித்தார். அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்ற‌னர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இந்தப் படத்தினை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ராஷி கண்ணா மற்றும் ‘கீதா கோவிந்தம்’ படப் புகழ் ராஷ்மிகா மந்தனா இருவரும் விஜய்யுடன் இணைய இருப்பதாக பேசப்படுகிறது. 

ஆனால் இந்தத் தகவலை அப்படத்தை இயக்கவுள்ள லோகேஷ் மறுத்துள்ளார். ‘விஜய்64’மூலம் இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் விஜய்யுடன் இணைய இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, நடிகர் விஜய்யை சந்தித்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.    

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கி வருகிறார். அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முடித்த பிறகு ‘விஜய் 64’ வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அட்லியின் ‘பிகில்’ இந்த வருட தீபாவளி பண்டிகையன்று வெளியான பின்பு விஜய், தன் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஆனால் இவை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close