[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" டிரைலைர் இன்று மாலை வெளியீடு

ajith-starring-nerkonda-paarvai-trailer-to-be-released-today-evening

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு
வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜித் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக் குழுவினர்
வெளி்யிட்டுள்ளனர். 

நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக்
செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’
ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப்
படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும். 

Image result for pink film

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி
‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின்
ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 

Image result for நேர்கொண்ட பார்வை ஃபர்ஸ்ட் லுக்

ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதுமாக
முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெறவுள்ளதாகவும் ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டது போல ஆகஸ்ட் 10ல் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close