[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

அக்டோபர் 9 நடிகர் விஷாலின் திருமணம் - நடிகர் சங்கம் ரெடியா?  

vishal-and-anisha-to-get-married-on-october-9

கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தனது வாழ்க்கை துணை யார் என அறிவித்தார் விஷால். அதில் அவர் தனது திருமணம் எப்போது? எங்கே நடைபெறவுள்ளது என்பதை பின்பு அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.


கடந்த மார்ச் 16 தேதி மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அனிஷாக்கும் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்கு இரு வீட்டாருக்குமிடையே மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டனர். அதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார் விஷால். அதில், “இந்தப் புகைப்படங்களே எல்லா விஷயத்தையும் கூறிவிடும். அனிஷா ரெட்டி என் வருங்கால மனைவி. மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஐ லவ் யு அனிஷா” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷாலுக்கும் அனிஷாவுக்கும் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம் நடத்த தேதி குறிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தனது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில்தான் நடைபெறும் என்று ஏற்கெனவே விஷால் வாக்கு அளித்திருந்தார். 

இதனிடையே அங்கே கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வேலைகள் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்துவிடும் எனத் தெரிகிறது. மேலும் மீண்டும் நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் விஷால் குழு போட்டியிட உள்ளது. புதிய பதவியேற்புக்கு பிறகு மண்டபத்தில் இந்த இளம் ஜோடியின் திருமணம் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close