[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

காதலர் தினப் பரிசாக சூர்யாவின் என்.ஜி.கே டீசர் 

ngk-official-teaser-on-feb-14

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே. படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  மேலும், சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த தீபாவளிகே இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் நடிகர் சூர்யா, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்துக்காக பணியாற்றினார். 

பின்னர் கடந்த வருட கடைசி மாதங்களில் என்.ஜி.கே. படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் படத்தின் டீசர் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படத்தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக என்.ஜி.கே குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் டீசர் குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். #NGKTeaserCelebration என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

என்.ஜி.கே திரைப்படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close