[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

‘Mr.லோக்கல்’ படப்பிடிப்புக்கு விடைகொடுத்தார் நயன்தாரா  

nayanthara-completes-shooting-for-sivakarthikeyan-s-mr-local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘Mr.லோக்கல்’ படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா முடித்து கொடுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

‘சிவா மனசுல சக்தி’,‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜேஷ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

 இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். 

இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் 2 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. மேலும் படத்திற்கு 'Mr.லோக்கல்' என்று பெயரும் வெளியானது. இதன் போஸ்டரில், கையில் டீ கிளாசை வைத்துக்கொண்டு கோட் சூட், கருப்பு கண்ணாடியுடன் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக அமர்ந்திருந்தார். பின்னணியில் விமானம் சென்னையில் இருந்து பாரீஸ் செல்வதை குறிப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. 

'Mr.லோக்கல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். மேலும் #MrLocal என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை முழுமையாக நயன்தாரா நடித்து கொடுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் படத்தின் பாடல் காட்சிகளை மட்டும் வெளிநாடுகளை எடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருதாக தெரிய வந்துள்ளது.  

ஏற்கெனவே சிவகார்த்திகேயனுடன் நடிகை நயன்தாரா, ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close