[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பிரபல நடிகர்-இயக்குனர் சீனிவாசனுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

actor-director-sreenivasan-hospitalized

பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான சீனிவாசன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள் ளார்.

பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இயக்குனருமான இவர், தமிழில் பார்த்திபன் இயக்கிய, ’புள்ளக்குட்டிக்காரன்’, பிரியதர் ஷன் இயக்கிய ’லேசா லேசா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுமார் 200-க்கும் அதிகமான மலையாளப் படங்களில் நடித்துள் ள ஸ்ரீனிவாசன், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதிய படம் ஒன்றின் டப்பிங் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டதையடுத்து மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக எர்ணாகுளம் மெடிக்கல் மையத்தில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போ து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close