[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

பயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்?

will-anil-kapoor-play-kalam-in-biopic

பயோபிக் சீசன் இது. அந்த வரிசையில் அடுத்ததாக திரைப்படமாக்கப்படுகிறது, இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை!

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை கதைகளை சினிமா ஆக்குவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில பயோபிக் படங்கள் வசூலை வாரி குவித்துள்ளதால் இந்த போக்கு இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 


குத்துச்சண்டை வீராங்கனை ’மேரி கோம்’ வாழ்க்கை கதை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை கதை, தோனியின் கதை, நடிகர் சஞ்சய் தத்தின் கதையான, சஞ்சு, முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையான ’நடிகையர் திலகம்’ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இதனால் இதுபோன்ற வாழ்க்கை கதைகளை உருவாக்கத் தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையில் ஹர்ஷ்வர்தன் கபூர் நடித்துவருகிறார்.

மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது. மற்றொரு பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை, வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். 

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது.ரோனி ஸ்குருவாலாவின் ஆர்எஸ்விபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

பிரபல தெலுங்கு ஹீரோவும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதை அவர் மகன் பாலகிருஷ்ணா நடிப்பில், தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதையில் மம்மூட்டி நடித்துள்ளார்.

இதற்கிடையே சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் வாழ்க்கை ’தாக்காரே’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் நவாஸூதின் சித்திக், தாக்கரேவாக நடித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் சினிமாவாகி இருக்கிறது. அவர் கேரக்டரில் அனுபம் கெர் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையும் படமாகி வருகிறது. இதில் மாதவன் நடித்துவருகிறார். 

இதற்கிடையே மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை நான்கு பேர் இயக்குவதாக அறிவித்துள்ளனர். நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் கதை படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சந்திரபாபு உட்பட பல பிரபலங்களின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. இதை தெலுங்கு தயாரிப்பாளர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் தயாரிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் அனில் கபூரை, அப்துல் கலாமாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close