[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி!

deepika-and-ranveer-singh-leave-for-their-wedding

தங்கள் திருமணத்தை முன்னிட்டு, இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் நேற்று இரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றனர். 

தமிழில் ’கோச்சடையான்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். அங்கு முன்னணி நடிகையாக இருக்கும் அவரும் பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். இருவரும் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இவர்கள் பற்றிய காதல் செய்திகள் வெளியானபோதும் அதுபற்றி வாய் திறக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில், ’எங்கள் திருமணம் 2018, நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம். அன்புடன் தீபிகா, ரன்வீர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இருவரின் திருமணமும் இந்து முறைப்படி நடக்கும். மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்படுவர். இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் 4 நாட்கள் வரை திருமண நிகழ்ச்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெங்களூரில் உள்ள தீபிகாவின் வீட்டில் தொடங்கியது. இதில் அவருக்கு வேண்டிய, நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இருவரும் நேற்று மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர். மும்பை விமான நிலையத்தில் கூடியிருந்த மீடியாவினருக்கு வழக்கமாக போஸ் கொடுக்காத இவர்கள், நேற்று உற்சாகமாக போஸ் கொடுத்தபடி சென்றனர். இதில் ரன்வீர் சிங்கிம் அம்மா, அப்பா, தங்கையும் ஆகியோரும் சென்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close