[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

இந்தியா முழுவதும் 3000 திரைகளில் ’சர்கார்’

3-000-screens-across-india-sarkar

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ’சர்கார்’ திரைப்படம் இந்தியாவில் 3000 திரைகளில் திரையிடப்பட
உள்ளது. 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ திரைப்படம், தீபவளியன்று
திரைக்கு வர உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

பல்வேறு இடங்களில் போஸ்டர்களும் பிரம்மாண்டமான கட்-அவுட்டுகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த
ஆண்டு விஜய்யின் மெர்சல் திரைப்படம் உலக அளவில் பிரபலமாகியது. தற்போது வெளியாக இருக்கும்
’சர்கார்’ திரைப்படம் அதைவிட பிரபலமாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 

’சர்கார்’ படத்தின் ட்ரைலர் காட்சியில் விஜய்யின் வழக்கமான நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் இருந்து
மாறுபட்டு காணப்பட்டது. அரசியல் கருத்துக்களை முன்வைத்தே காட்சிகள் உருவாக்கப்பட்ட வண்ணம்
இருந்தன. 

மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழ்நாடு அரசியல் குறித்து விமர்சித்தார்.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் திரைப்படத்தை
பிரம்பாண்டமாக தயாரித்தது. அதைத்தொடர்ந்து தற்போது, ’சர்கார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

தமிழகத்தில் ’சர்கார்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. ’சர்கார்’  
திரைப்படம் இந்தியாவில் 3000 திரைகளில் திரையிடப்பட உள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே
நேரத்தில், அதாவது நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close