[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய்

actor-vijay-requested-his-fans-not-to-pour-milk-over-sarkar-posters

பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என ரசிகர் மன்றங்கள் மூலமாக நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார். படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சர்காரின் பாடல் வெளியிடப்பட்டதில் இருந்து அத்திரைப்படம் சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பேசுபொருளானது. பாடல் வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ‘மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது’ என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார்.

பத்திரிகைக்கு பேட்டியளித்த  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார். அதற்கு ஏற்றார்போலவே டீசரில் அரசியல் வசனங்கள் பட்டையைக்கிளப்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வருண் என்பவர் ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார். கே.பாக்யராஜ் தலையிட்டு கதை தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். 

அதன்படி தீபாவளிக்கு வெளியாக  சர்கார் திரைப்படம் தயாராக இருக்கிறது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் பேனர்கள், பால் அபிஷேகம் என கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் முதல் நாள் கொண்டாட்டங்களில் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரசிகர் மன்றங்கள் மூலமாக நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கெனவே கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் விஜயின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்கள் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close