[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்

தீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி!

tamil-actors-association-assured-set-a-panel-to-look-into-me-too

பாலியல் புகார்களை கண்காணிக்க குழு ஒன்றை விரைவில் அமைக்க இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

 நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் ’மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல புகார்கள் வெளிவந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.

(கங்கனா)

நடிகை, தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கனா ரனவத், குயின் இயக்குனர் மீது பாலியல் புகார் சொல்ல, இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் அவர் மீது புகார் கூறினர்.

(சின்மயி)

ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசீந்திரன் மீது குற்றஞ்சாட்டினார். இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர், லீனா மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்நிலையில், தமிழில், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ’நிலா’, ’நிபுணன்’ படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக மீ டூவில் கூறியுள்ளார். இதற்கு அர்ஜூன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

(ஸ்ருதி ஹரிஹரன்)

இதற்கிடையே, தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக, சுயமரியாதையாக தங்கள் கலை யை செயல்படுத்தும் சூழலைத் தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கக் குழு ஒன்றையும் அமைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close