[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை

amyra-dastur-an-actor-squeezed-himself-against-me-during-shoot

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாடகி சின்மயி சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

பின்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது  பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கும், மீ டூ பரப்புரைக்கும் பலர் ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த், பிரகாஷ் ராஜ், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நடிகை அமைரா தஸ்தூரும் தனக்கு நிகழந்த பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்துள்ளார். தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக "அனேகன்" படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். இவர் கூறுகையில் "தென் இந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கையில் படத்தின் நாயகன் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பின் போது என்னை மிகவும் இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல கட்டிப்பிடித்தார். அப்போது என் காதருகில் உன்னுடன் நடிப்பது மிகவும் சந்தோஷம் என கிசுகிசுத்தார்."

மேலும் தொடர்ந்த அமைரா " இதனால் மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளான நான். அதன் பிறகு அந்தப் படப்பிடிப்பு நாட்களில் குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். படத்தின் நாயகனை பொருட்படுத்தாமல் இருக்க முயன்றேன். இதனால் கோபமடைந்த படத்தின் இயக்குநரும், அந்த நடிகரும் படப்பிடிப்பு தளத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாகவே வர சொல்வார்கள். என்னுடைய காட்சிகள் இல்லை என்றாலும் மணிக் கணக்கில் நிற்க வைப்பார்கள்" என்று கூறியுள்ளார்.  

யார் அந்த நடிகர் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட அமைரா, அந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும் கூறியுள்ளார். மேலும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அந்த நடிகரிடம் தன்னை இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் அமைரா தஸ்தூர் வேதனையுடன் கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close