[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ஹீரோவான ’சின்ன மச்சான்’ செந்தில் கணேஷின் ’கரிமுகன்’!

senthil-ganesh-has-become-a-hero-now

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ’சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. பிறகு இந்த பாடல் ’சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. 

யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள் இந்தப் பாடலை. இந்நிலையில் செந்தி ல் கணேஷ் ‘கரிமுகன்’ என்ற படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். அவர் ஜோடியாக காயத்ரி என்ற புதுமுக ம்  நடிக்கி றார். மற்றும் யோகிராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்சென்ட் ராய், தீபாஸ்ரீ, ரா.கா.செந்தில் நடிக்கின் றனர். ’சின்ன மச்சான்’ பாடலை எழுதிய செல்ல. தங்கையா, கதை திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார். எழில் பூஜித் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி செல்ல தங்கையா கூறும்போது, ‘நானும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். எங்கள் குழுவைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். செந்தில் கணேஷை நாயகனாக்கி ’திருடு போகாத மனசு’ என்ற படத்தை ஏற்கெனவே இயக்கி வெளியிட்டேன். பிறகு மீண்டும் அவரை வைத்து ’கரிமுகன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவர் புகழ் பெற்று விட்டார். இது எங்கள் குழுவுக்கு மகிழ்ச்சி. இது கமர்சியல் காமெடி படம். செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close