[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

’கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...’ : பாலியல் புகாருக்கு மன்னிப்புக் கேட்ட நடிகர்!

rajat-kapoor-accused-of-sexual-harassment-actor-issues-apology

தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரனவத்தை தொடர்ந்து பிரபல இந்தி நடிகர் மற்றும் இயக்குனர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியது. இது பொய் என்ற நானா படேகர், அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் தனுஸ்ரீ, நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா,  தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங்க் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த பரபரப்பு மாறுவதற்குள் நடிகை கங்கனா ரனவத், ’குயின்’ பட இயக்குனர் விகாஸ் பாஹ்ல் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறினார்.

Read Also -> கேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ ! 

’’குயின்’ பட ஷூட்டிங்கின் போது பலமுறை விகாஸிடம் அசவுகரியமாக நான் உணர்ந்திருக்கிறேன். விகாஸ் பாஹ்ல் ஒவ்வொருமுறை என்னைச் சந்திக்கும்போதும் இறுக்கிக் கட்டிப்பிடிப்பார். பிறகு என் கழுத்தில் முகத்தைப் புதைத்து என் தலைமுடியின் வாசனையை நுகர்வார். பிறகு உங்கள் வாசனையை விரும்புகிறேன் என்பார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்பதை சொல்வேன்’ என்று கூறியிருந்தார். இதுவும் இந்தி சினிமாவில் ஹாட் டாபிக் ஆனது. 

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரஜத் கபூர் மீது பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அவர், 2007 ஆம் ஆண்டு ரஜத் கபூரிடம் போனில் பேட்டி எடுத்தபோது, ஆபாசமாக பேசியதாகவும், ‘நீங்கள் செக்சியாக இருப்பீர்களா? உங்கள் உடல் அளவு என்ன?’ என்று கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Also -> தடுப்புக்காவலில் உள்ள இன்டர்போல் தலைவர் திடீர் ராஜினாமா!

இன்னொரு பெண், ’ரஜத் கபூர் அவர் நண்பர் நடிகர் சவுரவ் சுக்லா (இவர் தமிழில், அந்நியன், டேவிட், தில்லுக்கு துட்டு படங்களில் நடித்துள்ளார்) போனில் இருந்து அடிக்கடி போன் செய்து என்னை அழைப்பார். தனியான வீட்டில் உங்களை வைத்து ஷூட் பண்ண வேண்டும் என்று தொல்லை தருவார். இது சுக்லாவுக்கும் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார். 

இதுபற்றிய வாட்ஸ் ஆப் சாட்டிங்கை சந்தியா மேனன் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பரபரப்பானதை அடுத்து, நடிகர் ரஜத் கபூர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.  

Read Also -> இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..! 

ரஜத் கபூர் இந்தி சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்.  அவரது  பதிவில், ‘’என் வாழ்நாள் முழுவதும் நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்தேன். இருந்தாலும் என் வார்த்தை மற்றும் செயல்கள் மூலம் தடுமாறிவிட்டேன். இதன் மூலம் யாராவது காயப்பட்டிருந்தால் தயது செய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close