[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

கலாசாரமும் பாரம்பரியமும் அழிந்துவிடும்: ரஞ்சனி ஆவேசம்

culture-will-be-destroyed-if-we-don-t-fight-ranjini-on-sabarimala-verdict

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக நடிகை ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

தமிழில், முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உட்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சனி. மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர், இப்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ’இந்தத் தீர்ப்பை ஆச்சரியமாக பார்க்கவில்லை. ஏனென்றால் வட இந்தியர்களுக்கு ஐயப்பனையும் தெரியாது. நம் வழிபாட்டு முறைகளும் தெரியாது’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சனி, ’சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய் வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதோடு நமது வழிபாட்டு முறை தெரிந்த தென்னிந்திய நீதிபதி ஒருவரை அந்த வழக்கின் அமர்வி ல் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம். இதற்கு எதிராக போராடவில்லை என்றால் நமது கலாசாரமும் பாரம்ப ரியமும் அழிந்துவிடும். இதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘ரெடி டூ வெயிட்’ என்ற பிரசாரத்தில் நானும் இணைகிறேன். நம்மை போன்ற பக்தர்களை விட வேறு யாரால் நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க முடியும். இதில் பாலின பாகுபாடு ஏதும் இல்லை. இந்திய பல்வேறு கலா சாரங்களை ஊக்குவிக்கிறது. இதற்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்’ என்றார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close