[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

‘முண்டாசுப்பட்டி’  இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்

dhanush-to-team-up-with-mundasupatti-director-ramkumar-next

நடிகர் தனுஷின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து செய்தி வெளியாகி உள்ளது.

2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முண்டாசுப்பட்டி’. கதை ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை அடைந்தது இந்தப் படம். அதற்கு பிறகு இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. வெற்றி பட இயக்குநர்கள் அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பது தமிழ் சினிமாவை பொருத்தவரை வாடிக்கையான ஒன்றுதான். 

இந்நிலையில்தான் மீண்டும் விஷ்னு விஷாலையே வைத்து இவர் ’ராட்ச்சசன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஷ்னு ஒரு ரகசியத்தை போட்டு உடைத்தார். “நான் ‘முண்டாசுப்பட்டி’ படம் முடிந்த உடனேயே ‘அடுத்த கதையை ரெடி பண்ணுங்க உங்க படத்துல நடிக்கிறேன் ராம்’னு சொல்லி இருந்தேன். அவர் கண்டிப்பா சார். கண்டிப்பா சார்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனால் கதையை சொல்லவே இல்ல. அப்புறம் ‘ஒரு ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிருக்கேன் சார். வந்து சொல்றேன்’னு சொன்னார். அதன் பிறகும் பதில் வரவில்லை. 

திரும்ப என்னாச்சுனு தெரிஞ்சுக்க அவரது நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சுவிட்டதாக சொன்னார்கள். அதன் பிறகு ராமுக்கு போன் செய்தேன். அப்ப அவர், ‘இல்ல சார் இந்த ஸ்கிரிப்ட் உங்களுக்கு செட் ஆகாது’னு சொன்னார். நான் உண்மையில் மனம் உடைஞ்சு போயிட்டேன். அதன் பிறகு பலரிடம் அந்தக் கதையை சொல்லியிருக்கிறார். யாருமே நடிக்க முன்வரவில்லை. அதன் பிறகு சி.வி.குமாரிடம் போய் கதை சொன்னார். அவர் தயாரிப்பதாக இருந்தது. திரும்ப அங்க பிரச்னை. 

அப்புறம் என்கிட்ட வந்தார். நான் கேட்டேன். எனக்கு அந்தக் கதையில் அதிக ஹீரோயிசம் இருப்பதாக சொன்னேன். அவர், ‘என்ன சார்? கதையை கேட்டவங்க எல்லாம் கதையில ஹீரோயிசமே இல்லனு சொல்றாங்க..நீங்க என்னடானா?’ என்று இழுத்தார். நான் முதன்முதலாக போலீஸ் உடையைபோட்டு நடிக்கிறேன். அதனால் கொஞ்சம் கம்மி பண்ணலாம்னு சொன்னேன். திரும்ப மாத்தினார். இப்பவும் சொல்றேன். அடுத்த கதையை ரெடி பண்ணுங்க ராம். நானே நடிக்கிறேன்னு சொல்லிருக்கேன். அவரும் கண்டிப்பா சார்னு சொல்லியிருக்கார். ஆனா அவர் அடுத்து யார் கூட படம் பண்ண போறார் தெரியுமா? தனுஷ் கூட பண்ண போகிறார்” என்றார். 

சில மாதங்களாகவே தனுஷின் அடுத்த இயக்குநர் ராம்குமார்தான் என பேச்சு திரை உலகில் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக விஷ்னு விஷால் மேடையில் போட்டு உடைத்திருக்கிறார். இதன் நடுவே தனுஷே ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளும் சென்று கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close